/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மின்வாரிய அலுவலகத்திற்கு பூட்டு விருத்தாசலம் அருகே பரபரப்புமின்வாரிய அலுவலகத்திற்கு பூட்டு விருத்தாசலம் அருகே பரபரப்பு
மின்வாரிய அலுவலகத்திற்கு பூட்டு விருத்தாசலம் அருகே பரபரப்பு
மின்வாரிய அலுவலகத்திற்கு பூட்டு விருத்தாசலம் அருகே பரபரப்பு
மின்வாரிய அலுவலகத்திற்கு பூட்டு விருத்தாசலம் அருகே பரபரப்பு
ADDED : ஜன 11, 2024 03:56 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வாடகை பாக்கியால், மின் அலுவலகத்தை கட்டட உரிமையாளர் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் தனியார் கட்டடத்தில், உதவி மின் பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதில், மங்கலம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள விசலுார், கோவிலானுார், பள்ளிப்பட்டு, சமத்துவபுரம், கர்ணத்தம், காட்டுப்பரூர், எடச்சித்துார், டி.மாவிடந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தினசரி வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று காலை 8:30 மணி மணியளவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் வழக்கம்போல் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது, மின்வாரிய அலுவலகம் பூட்டு போட்டு பூட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து, விசாரித்தபோது, வாடகை பிரச்னையால் கட்டட உரிமையாளர் அலுவலகத்தை பூட்டியது தெரிய வந்தது.
மின் நுகர்வோர்களின் நலன் கருதி, மின் வாரிய அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மங்கலம்பேட்டை போலீசாரிடம் மின்துறை அதிகாரிகள் முறையிட்டனர்.
அதன்பேரில், கட்டிட உரிமையாளரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், காலை 11:00 மணியளவில் அலுவலகம் திறக்கப்பட்டு, வழக்கம் போல் செயல்படத் தொடங்கியது.
வாடகை பாக்கியால் மின் அலுவலகத்தை கட்டட உரிமையாளர் பூட்டிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.