/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கோவில் அலுவலகம் கட்ட எதிர்ப்பு திட்டக்குடி அருகே பரபரப்புகோவில் அலுவலகம் கட்ட எதிர்ப்பு திட்டக்குடி அருகே பரபரப்பு
கோவில் அலுவலகம் கட்ட எதிர்ப்பு திட்டக்குடி அருகே பரபரப்பு
கோவில் அலுவலகம் கட்ட எதிர்ப்பு திட்டக்குடி அருகே பரபரப்பு
கோவில் அலுவலகம் கட்ட எதிர்ப்பு திட்டக்குடி அருகே பரபரப்பு
ADDED : ஜன 25, 2024 05:26 AM

திட்டக்குடி, : திட்டக்குடி அருகே, கோவில் ஆய்வாளர் அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, பூமி பூஜையை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த தர்மகுடிகாடு பகுதியில் அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் கோவில் ஆய்வாளர் அலுவலகம் கட்ட நேற்று காலை பூமி பூஜை நடந்தது. கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்படடோர், இங்கு, 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். அதனால் அப்பகுதியில் அலுவலகம் கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பூமி பூஜையை தடுத்து நிறுத்தினர்.
திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இது தொடர்பாக தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.