/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திரவுபதி அம்மன் கோவிலில் இன்று தீமிதி திருவிழா திரவுபதி அம்மன் கோவிலில் இன்று தீமிதி திருவிழா
திரவுபதி அம்மன் கோவிலில் இன்று தீமிதி திருவிழா
திரவுபதி அம்மன் கோவிலில் இன்று தீமிதி திருவிழா
திரவுபதி அம்மன் கோவிலில் இன்று தீமிதி திருவிழா
ADDED : ஜூன் 13, 2025 03:44 AM
கடலுார்: கடலுார், பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா இன்று நடக்கிறது.
கடலுார், பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி பிரம்மோற்சவ விழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 9ம் தேதி மாலை அரச்சுனர் வில் வளைத்தலை தொடர்ந்து அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.
10ம் தேதி திரவுபதி அம்மன், அர்ச்சுனர் பரிவேட்டை, 11ம் தேதி பூச்சொரிதல் உற்சவம், நேற்று கரக உற்சவமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (13ம் தேதி) மாலை தீ மிதி திருவிழா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் பெருமாள், சந்திரசேகரன், கோவிந்தன், கந்தசாமி, சுந்தரேசன், விழாக்குழு தலைவர்கள் சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி செய்து வருகின்றனர்.