/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா
ADDED : ஜூன் 07, 2025 10:26 PM

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் அடிவாரத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா கடந்த 1ம் தேதி துவங்கியது.
கடந்த 2ம் தேதி அர்சுணன் - திரவுதியம்மன் திருக்கல்யாணம் நடந்தது.
கடந்த 5ம் தேதி கரகத் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு ஏராளமான பக்தர்கள் தீமித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.