ADDED : ஜூன் 07, 2025 02:59 AM

கடலுார் : வடலுார் பச்சை வாழியம்மன் கோவில் தீமிதி விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வடலுார், ஆபத்தாரணபுரம் பச்சை வாழியம்மன் கோவில் தீமிதி விழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் ரத உற்சவம், நேற்று புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலா நடந்தது.
நேற்று காலை 7:30 மணி முதல் 9:00 மணிக்குள் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு தேர் உற்சவம், 4:.30மணிக்கு தீமிதி திருவிழாவும் நடந்தது. 500க்கு மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். குலதெய்வ வழிபடுவோர் உட்பட ஏராமானோர் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.