Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கலெக்டர் காலில் விழுந்த பெண் குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு 

கலெக்டர் காலில் விழுந்த பெண் குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு 

கலெக்டர் காலில் விழுந்த பெண் குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு 

கலெக்டர் காலில் விழுந்த பெண் குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு 

ADDED : பிப் 06, 2024 04:42 AM


Google News
கடலுார் : கடலுார் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டர் காலில் பெண் விழுந்து கதறி அழுததால் பரபரப்பு நிலவியது.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் அருண் தம்புராஜ் பொதுமக்களிடம் மனுக்கள் பெறவந்த போது, பெண் ஒருவர் திடீரென கலெக்டரின் காலில் விழுந்து கதறி அழுததால் பரபரப்பு நிலவியது.

உடன், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த பெண்ணை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர்.

இதில், கடலூர், சிப்காட் அடுத்த பூண்டியாங்குப்பத்தை சேர்ந்த கதிர்காமன் மனைவி ரேவதி, 31; என்பது தெரிந்தது.

உடல் நலக்குறைவால் அவரது கணவர் இறந்ததால் 2 பிள்ளைகளுடன் வேலையின்றி சிரமப்படுவதாகவும், ஏதாவது ஒரு வேலை கேட்டு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மனு அளிக்க வந்ததாக கூறினார்.

இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us