/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ செங்குந்த மகாஜன சங்க முப்பெரும் விழா செங்குந்த மகாஜன சங்க முப்பெரும் விழா
செங்குந்த மகாஜன சங்க முப்பெரும் விழா
செங்குந்த மகாஜன சங்க முப்பெரும் விழா
செங்குந்த மகாஜன சங்க முப்பெரும் விழா
ADDED : செப் 01, 2025 11:21 PM

பண்ருட்டி: பண்ருட்டி செங்குந்த மகாஜன சங்கத்தின் 37வது ஆண்டு விழா, மாணவர்களுக்கு கல்வி ஊக்க பரிசளிப்பு விழா, நினைவேந்தல் என முப்பெரும் விழா நடந்தது.
பண்ருட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செங்குந்த மகாஜன சங்க தலைவர் ராஜவேலு தலைமை தாங்கி சங்க கொடியேற்றினார்.
மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, பொருளாளர் ராஜாமணி, புதுச்சேரி பொதுச் செயலாளர் ராஜாக்கண்ணு, பண்ருட்டி தலைவர் வேலாயுதம், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சுப்ரமணியன் வரவேற்றார். செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆண்டறிக்கை வாசித்தார்.
நிகழ்ச்சியில், கடந்த கல்வி ஆண்டில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சமுதாய பொருளாதார தொண்டு மன்ற செயற்குழு உறுப்பினர் ராசு, மாவட்ட துணைத் தலைவர் அப்பர், மாநில இளைஞரணி அறிவழகன், தயாநிதி, சோமசுந்தரம், இளைஞரணி தலைவர் கருணாநிதி, அன்புமொழி, ஆனந்தபாபு, வசந்தகுமார், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.