/உள்ளூர் செய்திகள்/கடலூர்/காணிக்கை உண்டியல் திருட்டு பெண்ணாடம் அருகே பரபரப்புகாணிக்கை உண்டியல் திருட்டு பெண்ணாடம் அருகே பரபரப்பு
காணிக்கை உண்டியல் திருட்டு பெண்ணாடம் அருகே பரபரப்பு
காணிக்கை உண்டியல் திருட்டு பெண்ணாடம் அருகே பரபரப்பு
காணிக்கை உண்டியல் திருட்டு பெண்ணாடம் அருகே பரபரப்பு
ADDED : ஜன 08, 2024 05:37 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே அம்மன் கோவில் காணிக்கையை திருடி, உண்டியலை ஏரியில் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.
பெண்ணாடம் அடுத்த மேல கோனுார் கிராமத்தில் பிடாரி செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். கோவில் நிர்வாகி அறிவழகன் பராமரித்து வந்தார்.
நேற்று காலை அவ்வழியே சென்ற மக்கள் கோவிலின் பூட்டு உடைந்திருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து, அறிவழகனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் வந்து பார்த்தபோது, கோவிலில் வைத்திருந்த 3 அடி உயர உண்டியலை மர்ம நபர் திருடிச் சென்றது தெரிந்தது.
கிராம மக்கள் உண்டியலை தேடியபோது அதே பகுதியில் விழுப்புரம் - திருச்சி ரயில் பாதையையொட்டி உள்ள ஏரியில் காணிக்கையை திருடிக்கொண்டு உண்டியலை மர்ம நபர்கள் வீசிச்சென்றது தெரிந்தது. உண்டியலில் 10 ஆயிரம் ரொக்கம் இருக்கும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகி அறிவழகன் கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.