Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'ஸ்மார்ட்' வகுப்பறை அமைக்கும் பணி... தீவிரம்;  துவக்கப் பள்ளிகளில் அதிரடி நடவடிக்கை

 'ஸ்மார்ட்' வகுப்பறை அமைக்கும் பணி... தீவிரம்;  துவக்கப் பள்ளிகளில் அதிரடி நடவடிக்கை

 'ஸ்மார்ட்' வகுப்பறை அமைக்கும் பணி... தீவிரம்;  துவக்கப் பள்ளிகளில் அதிரடி நடவடிக்கை

 'ஸ்மார்ட்' வகுப்பறை அமைக்கும் பணி... தீவிரம்;  துவக்கப் பள்ளிகளில் அதிரடி நடவடிக்கை

ADDED : ஜூன் 12, 2024 01:50 AM


Google News
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் அரசு துவக்கப் பள்ளியில் 'ஸ்மார்ட்' வகுப்பறை அமைக்கும் பணிபடிப்படியாக நடந்து வருகிறது.

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்தபள்ளிக் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக,மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடம் சார்ந்த தகவல், கம்ப்யூட்டர்,மடிக்கணினி வாயிலாக கற்பிக்கப்படுகிறது.

இதற்காக, இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர்ரக தொழில்நுட்ப ஆய்வகம் (ைஹடெக் லேப்) உள்ளது. அதன்படி, கடலுார் மாவட்டத்திலும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர்ரக தொழில்நுட்ப ஆய்வகம் உள்ளது.

இதன் மூலமாக ஒவ்வொரு வகுப்பு மாணவ, மாணவியருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு, கற்றல் பணி நடந்து வருகிறது. பாடம் சார்ந்த தகவல் பெறுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை தொடர்ந்து, அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் உயர்ரக தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது. அந்த வகையில், கடலுார் மாவட்டத்தில் உயர்ரக தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடலுார் மாவட்டத்தில் 913 அரசு துவக்கப் பள்ளிகள் உள்ளது. இதில், முதற்கட்டமாக 170 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் துவங்கப்பட்டு கற்பித்தல் பணி நடக்கிறது. மற்ற பள்ளிகளுக்கு முதற்கட்டமாக பிராட்பேண்ட் இணைய சேவை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

கரும்பலகை இல்லாமல் அகன்ற டிஜிட்டல் திரையில் ஒலி - ஒளி அமைப்புடன் கூடிய கற்றல் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளவும், கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் இந்த நவீன வகுப்பறைகள் அமைக்கப்படுகிறது.

வரும் கல்வியாண்டிற்குள் மீதமுள்ள அனைத்து துவக்கப் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறையும், 275 நடுநிலைப் பள்ளிகளில் உயர்ரக தொழில்நுட்ப ஆய்வகமும் அமைக் கப்படும்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us