/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சாமி ஊர்வலத்தில் பிரச்னை போலீசை கண்டித்து மறியல்சாமி ஊர்வலத்தில் பிரச்னை போலீசை கண்டித்து மறியல்
சாமி ஊர்வலத்தில் பிரச்னை போலீசை கண்டித்து மறியல்
சாமி ஊர்வலத்தில் பிரச்னை போலீசை கண்டித்து மறியல்
சாமி ஊர்வலத்தில் பிரச்னை போலீசை கண்டித்து மறியல்
ADDED : பிப் 25, 2024 04:14 AM

கடலுார் : கடலுாரில் சாமி ஊர்வலத்தின் போது, மேள தாளங்களை போலீசார் பறிமுதல் செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார், கே.என்.பேட்டை முத்துமாரியம்மன் கோவில் சாமியை, மாசிமக தீர்த்தவாரிக்காக அப்பகுதி மக்கள் நேற்று 100க்கும் மேற்பட்டோர் மேள தாளங்கள் முழங்க தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
கூத்தப்பாக்கம் கான்வென்ட் பஸ் நிறுத்தம் அருகே 10:00 மணிக்கு ஊர்வலம் வந்தபோது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் மேள தாளங்கள் வாசிக்கக் கூடாது. அமைதியாக செல்லுமாறு புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீசார் கூறினர்.
இதனால், சாமி ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து, மேள தாளங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊர்வலத்தில் வந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்து 10:30 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. பின், சாமி ஊர்வலமாக தீர்த்தவாரிக்கு கொண்டு செல்லப்பட்டது.