/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பாலாலயம் கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பாலாலயம்
கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பாலாலயம்
கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பாலாலயம்
கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பாலாலயம்
ADDED : ஜூன் 07, 2025 02:51 AM

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பாலாலயம் நடந்தது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தனி சன்னதியாக உள்ள கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி கடந்த 4ம் தேதி ஆயிரங்கால் மண்டப முகப்பில், யாக சாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 7:00 மணி முதல் 7:15 க்குள் பாலாலயம் நடந்தது.
முன்னதாக யானை, குதிரை முன்னே செல்ல மேளதாளத்துடன் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சுவாமி ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தார். பின், சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.