/உள்ளூர் செய்திகள்/கடலூர்/என்.எல்.சி., சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தியதால் பரபரப்புஎன்.எல்.சி., சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
என்.எல்.சி., சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
என்.எல்.சி., சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
என்.எல்.சி., சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
ADDED : ஜன 04, 2024 03:01 AM

விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே என்.எல்.சி., நிர்வாகம் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், கம்மாபுரம் அடுத்த கரைமேடு, மும்முடி சோழகன், கத்தாழை ஆகிய கிராமங்களில் என்.எல்.சி., நிர்வாகம் 2வது சுரங்க விரிவாக்க பணிக்காக கடந்த 2000ம் ஆண்டு நிலங்களை கையகப்படுத்தியது.
இதில் சாலை அமைக்கும் பணியை, என்.எல்.சி., நிர்வாகம் தற்போது மேற்கொண்டு வருகிறது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் நேற்று, தங்கள் பகுதி இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும். என்.எல்.சி.,யில் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் கம்மாபுரம் போலீசார், அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று பொதுமக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் திடீர் போராட்டத்தில் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.