Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கிராமசபை கூட்டம் 10ம் தேதி நடத்த உத்தரவு

கிராமசபை கூட்டம் 10ம் தேதி நடத்த உத்தரவு

கிராமசபை கூட்டம் 10ம் தேதி நடத்த உத்தரவு

கிராமசபை கூட்டம் 10ம் தேதி நடத்த உத்தரவு

ADDED : ஜன 08, 2024 05:35 AM


Google News
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வரும் 10ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த கலெக்டர் கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்டத்தில், 10ம் தேதி காலை 11:00 மணியளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் 2024--25ம் ஆண்டிற்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்து, ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறை மற்றும் இதர சார்பு துறைகளின் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் குறித்து விவாதிக்க வேண்டும். இச்சிறப்பு கிராமசபை கூட்டத்தில்பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றியும், பொது இடங்களில், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில் நடத்த வேண்டும். கூட்டம் நடைபெறும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே பொதுமக்களுக்கு, ஊராட்சி தலைவர்கள் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us