/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருவதிகை சரநாராயண பெருமாள் தன்வந்திரி அலங்காரத்தில் அருள்பாலிப்பு திருவதிகை சரநாராயண பெருமாள் தன்வந்திரி அலங்காரத்தில் அருள்பாலிப்பு
திருவதிகை சரநாராயண பெருமாள் தன்வந்திரி அலங்காரத்தில் அருள்பாலிப்பு
திருவதிகை சரநாராயண பெருமாள் தன்வந்திரி அலங்காரத்தில் அருள்பாலிப்பு
திருவதிகை சரநாராயண பெருமாள் தன்வந்திரி அலங்காரத்தில் அருள்பாலிப்பு
ADDED : ஜூன் 26, 2025 01:18 AM

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று ஆனிமாத அமாவாசை முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று 25ம்தேதி ஆனிமாத அமாவாசை முன்னிட்டு மூலவர் பெருமாள் தன்வந்திரி பெருமாளாக அருள்பாலித்தார்.
விழாவையொட்டி காலை 6:00 மணிக்கு விஸ்ரூப தரிசனம், 8:00 மணிக்கு மூலவர் பெருமாள் தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை. மாலை 4:30 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது. தன்வந்திரி பெருமாள் அலங்காரம் முன்னிட்டு பக்தர்களுக்கு இலவசமாக தன்வந்திரிபெருமாள் பிரசாதமாக லேகியம் வழங்கப்பட்டது.