ADDED : ஜூன் 02, 2025 12:12 AM

சிதம்பரம்: சிதம்பரம் வேங்கான் தெருவில் திருவாசகம் முற்றோதல் நடந்தது.
சிதம்பரம் வேங்கான் தெருவில் திருபாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஆத்மநாதர் கோவிலை கட்டிய மாணிக்கவாசகர் அங்கேயே தங்கி வழிபாடு செய்தார். அவருக்கு முன்பே, பதஞ்சலி, வியாக்கிரபாதர், குருநமச்சிவாயர் போன்ற முனிவர்கள், பர்ணாசாலை அமைத்து தவம் செய்த இடமாகும்.
நேற்று காலை உலக சிவனடியார்கள் திருக் கூட்டம், தமிழ் மாநில திருவாசக குழுக்கள், சிவனடியார்கள் என, 500க்கும் மேற்பட்டோர் திருவாசகம் முற்றோதல் செய்து வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை ஹிந்து ஆலய பாதுகாப்புக்குழு செங்குட்டுவன், கோவில் டிரஸ்டி பசவராஜ் செய்திருந்தனர்