Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெட்டிக்கடைக்குள் பதுங்கியிருக்கும் பத்திரப்பதிவு அலுவலகம் பண்ருட்டியில் பரிதாபம்

பெட்டிக்கடைக்குள் பதுங்கியிருக்கும் பத்திரப்பதிவு அலுவலகம் பண்ருட்டியில் பரிதாபம்

பெட்டிக்கடைக்குள் பதுங்கியிருக்கும் பத்திரப்பதிவு அலுவலகம் பண்ருட்டியில் பரிதாபம்

பெட்டிக்கடைக்குள் பதுங்கியிருக்கும் பத்திரப்பதிவு அலுவலகம் பண்ருட்டியில் பரிதாபம்

ADDED : மார் 19, 2025 04:56 AM


Google News
Latest Tamil News
பண்ருட்டி கும்பகோணம் சாலையில் புதிதாக கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தை சில மாதங்களுக்கு முன் துணை முதல்வர் உதயநிதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். சார்பதிவாளர் அலுவலக வாயில் முன்பு இருந்த வழியை பொதுப்பணித்துறையினர் சுவர் வைத்து அடைத்துவிட்டு, பத்திரபதிவு அலுவலகத்தின் இடதுபுறம் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனக்கு செல்லும் 10 அடி பாதையை பதிவு துறையினர் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் பத்திர பதிவிற்கு வருபவர்கள் பைக் உள்ளிட்ட வாகனங்களை தாறுமாறாக நிறுத்தியதால், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வதில் இடையூறு ஏற்பட்டது.

இதனால், போக்குவரத்து போலீசார் 2 மாதங்களுக்கு முன் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்லும் வழியில் தடுப்பு வேலி ஏற்படுத்தினர்.

அதேநேரத்தில் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு அமைத்துள்ள மதில் சுவரையொட்டி 15 அடி அகலம், 10 அடி அகலத்தில் டீக்கடை வைப்பதற்கான இரும்பு பெட்டியை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். பத்திரப்பதிவு துறை அதிகாரிகள், அலுவலக வாயில் முன் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற எந்த நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் பதிவிற்கு வரும் மக்கள் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் வாகனங்களை நிறுத்தினால், போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.

இதற்கு மாவட்ட நிர்வாகம், பத்திர பதிவுதுறையினர் ஆக்கிரமிப்புகள் அகற்றி அலுவலக வாயில் திறந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us