இறந்து கிடந்தவர் அடையாளம் தெரிந்தது
இறந்து கிடந்தவர் அடையாளம் தெரிந்தது
இறந்து கிடந்தவர் அடையாளம் தெரிந்தது
ADDED : ஜன 05, 2024 12:19 AM
பெண்ணாடம், : பெண்ணாடம் அருகே வயலில் இறந்து கிடந்த முதியவர் அடையாளம் தெரிந்தது.
பெண்ணாடம் அடுத்த காரையூர் கிராமத்தில் உள்ள வயலில் நேற்று முன்தினம் அழுகிய நிலையில் முதியவர் உடல் கிடந்தது.
அவர் யார் என, தெரியவில்லை, கொலை செய்து வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், பெண்ணாடம் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், இறந்தவர் திருமலை அகரத்தைச் சேர்ந்த முத்துவேல், 76, என்பதும், மனநலம் பாதித்த நிலையில் காரையூர் வயல் பகுதியில் இறந்து கிடந்தது தெரிந்தது.
புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.