/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கலெக்டரின் 'நற்சான்றிதழ்' கடைசி நேரத்தில் கைநழுவியதுகலெக்டரின் 'நற்சான்றிதழ்' கடைசி நேரத்தில் கைநழுவியது
கலெக்டரின் 'நற்சான்றிதழ்' கடைசி நேரத்தில் கைநழுவியது
கலெக்டரின் 'நற்சான்றிதழ்' கடைசி நேரத்தில் கைநழுவியது
கலெக்டரின் 'நற்சான்றிதழ்' கடைசி நேரத்தில் கைநழுவியது
ADDED : ஜன 31, 2024 02:23 AM
குடியரசு தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கலெக்டர் பதக்கம் வழங்கி கவுரவிப்பது வழக்கம். இந்த ஆண்டு குடியரசு தினவிழாவையொட்டி அனைத்து துறைகளில் இருந்தும் சிறப்பாக பணியாற்றியவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டது. அதன்படி கடலுார் மாவட்ட கல்வித்துறையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு டிரைவருக்கு, அந்த துறை அதிகாரி நற்சான்றிதழுக்கு பரிந்துரை செய்துள்ளார். டிரைவர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என, அதிகாரிகள் தெரிவிக்க, அதையும் மீறி, கல்வித்துறை அதிகாரி நேரடியாக சிபாரிசு செய்து கலெக்டருக்கு கடிதம் அனுப்ப, அவரது பெயர், நற்சான்றிதழ் பட்டியலில் ஏறிவிட்டது.
இதேபோல், வேளாண் துறையிலும் ஒரு டிரைவருக்கு நற்சான்றிதழ் வழங்க சிபாரிசு செய்யப்பட்டது. கடைசி நேரத்தில் வேளாண் துறையில் சிபாரிசு செய்த டிரைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தெரியவந்ததால் அவரது பெயரை வேளாண் துறை அதிகாரிகளே நீக்கிவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த டிரைவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் யாரும் சான்றிதழ் வாங்கவில்லையா என ஆவேசமாக கேட்டார். அப்போதுதான் 'குட்டு' வெளிப்பட்டு கல்வித்துறையில் ஒரு டிரைவரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விவரம் தெரிந்தது. உடனே கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் துருவி துருவி விசாரணை செய்து, உறுதி செய்தனர்.
அதையடுத்து, 25ம் தேதி இரவோடு இரவாக அவரது பெயரை நீக்கிவிட்டனர். அதனால் 26ம் தேதி நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் கையால் வாங்க வேண்டிய நற்சான்றிதழ் கை நழுவிப்போனது.