/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டம்குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டம்
குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டம்
குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டம்
குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டம்
ADDED : ஜன 06, 2024 04:56 AM
சிதம்பரம், : சிதம்பரத்தில், தமிழ்நாடு குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது.
சிதம்பரம் மா.கம்யூ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தர்மதுரை தலைமை தாங்கினார். அமைப்பின் மாநில பொருளாளர் துரைராஜ் அமைப்பின் நோக்கம் குறித்து பேசினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சரவணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் வாஞ்சிநாதன், கீரப்பாளையம் மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் செல்லையா, விவசாய சங்க ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலசுந்தரம், மருதவாணன், சாமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பயிர் காப்பீட்டுத் தொகையை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கே வழங்க வேண்டும். குத்தகைத் தொகையை ஆண்டுதோறும் உயர்த்துவதைத் தடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிவனேசன் நன்றி கூறினார்.