/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தை கடைசி முகூர்த்த நாள்; கோவில்களில் நெரிசல்தை கடைசி முகூர்த்த நாள்; கோவில்களில் நெரிசல்
தை கடைசி முகூர்த்த நாள்; கோவில்களில் நெரிசல்
தை கடைசி முகூர்த்த நாள்; கோவில்களில் நெரிசல்
தை கடைசி முகூர்த்த நாள்; கோவில்களில் நெரிசல்
ADDED : பிப் 11, 2024 10:48 PM
விருத்தாசலம்: தை மாத கடைசி முகூர்த்த நாளான நேற்று, விருத்தாசலம் கோவில்களில் ஏராளமான திருமணங்கள் நடந்தது.
விருத்தாசலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர், வேடப்பர் கோவில்கள் உள்ளன. நேற்று தை மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த நாள் என்பதால் நுாற்றுக்கணக்கான திருமணம், காதணி விழாக்கள் நடந்தன. இவற்றுக்கு வந்த உறவினர்கள், பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டதால், கோவில் வளாகம் முழுவதும் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. அதுபோல், நகர சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.