ADDED : ஜன 25, 2024 05:26 AM
புதுச்சத்திரம் : சிதம்பரம் எர்ணாவூரைச் சேர்ந்தவர் சோமு மகன் மகேஷ், 35; கேட்டரிங் மாஸ்டர். இவர், நேற்று காலை, கடலூரில் இருந்து சிதம்பரத்திற்கு பைக்கில் சென்றார்.
புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது, சிதம்பரத்திலிருந்து கடலூர் சென்ற கார் மோதியது. விபத்தில், மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.