ADDED : ஜன 08, 2024 05:37 AM
கடலுார்: கடலுார் பஸ் நிலையம் அருகில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் திருப்பாதிரிபுலியூர் மார்க்கெட் காலனியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரகாஷ், 21; இவர் நேற்று கடலுார் பஸ் நிலையம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தீன் கீழ் நின்று கஞ்சா விற்பனை செய்தார்.
தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் சப் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரகாைஷ கையும் களவுமாக பிடித்தனர். அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
புகாரின் பேரில் திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்குப் பதிந்து பிரகாஷ்,21; கைது செய்து சிறையில் அடைத்தனர்.