ADDED : செப் 10, 2025 11:32 PM

மந்தாரக்குப்பம்: குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ராஜவேல் தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர்கள் பெரியார்செல்வம், பாலாஜி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் வைத்தியநாதன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் அரிமா சங்க மாவட்ட தலைவர் ராஜமாரியப்பன், டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின், ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
விழாவில், ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் சிவசங்கர் நன்றி கூறினார்.