/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிருஷ்ணசாமி கல்லுாரியில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா கிருஷ்ணசாமி கல்லுாரியில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா
கிருஷ்ணசாமி கல்லுாரியில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா
கிருஷ்ணசாமி கல்லுாரியில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா
கிருஷ்ணசாமி கல்லுாரியில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா
ADDED : ஜன 08, 2025 05:59 AM

கடலுார் : கடலுார் கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரியில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பட்டிமன்றம் நடந்தது.
விழாவிற்கு கல்லுாரி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
கல்லுாரி செயலாளர் விஜயகுமார், கல்லுாரி முதல்வர் நிர்மலா, நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன் வாழ்த்துரை வழங்கினர். தமிழ் வளர்ச்சித்துறை உதவி அலுவலர் ஜெயலட்சுமி, விழாவை ஒருங்கிணைத்தார்.
தமிழ்த்துறை தலைவர் கீதா வரவேற்றார். தமிழுக்கு பெருமை சேர்ப்பது சங்க காலமா, சம காலமா எனும் தலைப்பில் பட்மன்றம் நடந்தது.
தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரி உதவி பேராசிரியை ஜானகி ராஜா பட்டிமன்ற நடுவராகவும், கலையரசி மற்றும் பால்கி அணித தலைவர்களாக பங்கேற்றனர்.
மாணவிகள் நவநதி, ஜெனிஷா, வனஜா, ஆப்ரா பேச்சாளர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியை வெண்ணிலா தொகுத்து வழங்கினார். தமிழ்மொழி நன்றி கூறினார்.