/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தமிழக பட்ஜெட்டை கண்டித்து பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்தமிழக பட்ஜெட்டை கண்டித்து பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழக பட்ஜெட்டை கண்டித்து பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழக பட்ஜெட்டை கண்டித்து பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழக பட்ஜெட்டை கண்டித்து பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 23, 2024 10:27 PM

கடலுார் : தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தினர், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2024-2025 தமிழக பட்ஜெட்டில் கோரிக்கைகள்அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், எந்த அறிவிப்பும் இல்லாததை கண்டித்து கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க மாவட்டத் தலைவர் இருதயராஜ் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் சரவணன், குப்புசாமி, ராஜாமணி, விவேகநிதின் கண்டன உரையாற்றினர். கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தேவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், அனைத்து துறை அரசு பணியாளர்கள் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.