/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தமிழ் இலக்கிய கூட்டம்: கலெக்டர் பங்கேற்புதமிழ் இலக்கிய கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு
தமிழ் இலக்கிய கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு
தமிழ் இலக்கிய கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு
தமிழ் இலக்கிய கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு
ADDED : பிப் 11, 2024 03:02 AM

கடலுார்: கடலுார் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழறிஞர்கள், எழுத்தாளர்களின் நினைவை போற்றும் தமிழ் இலக்கியக் கூட்டம் கிருஷ்ணசாமி கல்லுாரியில் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா குத்துவிளக்கேற்றினர்.
தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அன்பரசி வரவேற்றார். தமிழ் ஆர்வலர்கள், கலை இலக்கியவாதிகள், கலைக்குழுவினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.
கலெக்டர் அருண்தம்புராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றிப் பெற்ற 26 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.1,76 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தாமரைச்செல்வன், கிருஷ்ணசாமி கல்விக் குழும செயலாளர் விஜயகுமார், கல்லூரி முதல்வர் நிர்மலா, வீர சைவ மடாலயம் 9ம் ஞானியார் சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் கீதா நன்றி கூறினார்.