
மந்தாரக்குப்பம், : மந்தாரக்குப்ப போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் சந்திரன் பொறுப்பேற்றார்.
மந்தாரக்குப்பம் போலீசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய மலர்விழி கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராப்பாளையத்திற்கு மாற்றப்பட்டார். அதையடுத்து, திருகோவிலுாரில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சந்திரன் மந்தாரக்குப்பத்திற்கு நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.