/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சோலைவாழி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சோலைவாழி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
சோலைவாழி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
சோலைவாழி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
சோலைவாழி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED : செப் 22, 2025 11:27 PM

கடலுார் : கடலுார் சோலைவாழி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வெள்ளிமோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி அம்மன் கோவிலில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அம்மனுக்கு சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை காங்.,மாநகர தலைவர் வேலுச்சாமி, மாநகராட்சி கவுன்சிலர் சரஸ்வதி வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் குமார்செய்திருந்தனர்.
ஊர் முக்கியஸ்தர்கள் சவுந்தரராஜன், செந்தில், சிவமணி, குமார், ராமு, காங்., மாவட்ட பொதுச் செயலாளர்கள் காமராஜ், கிஷோர்,அமரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.