/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுாரில் திடீர் கனமழை; மின்சாரம் துண்டிப்பு கடலுாரில் திடீர் கனமழை; மின்சாரம் துண்டிப்பு
கடலுாரில் திடீர் கனமழை; மின்சாரம் துண்டிப்பு
கடலுாரில் திடீர் கனமழை; மின்சாரம் துண்டிப்பு
கடலுாரில் திடீர் கனமழை; மின்சாரம் துண்டிப்பு
ADDED : செப் 12, 2025 08:02 AM
கடலுார்; கடலுாரில் நேற்று பெய்த திடீர் கன மழையால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
கடலுாரில் நேற்று காலை கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில், மதியத்திற்கு மேல் மேகமூட்டங்கள் அதிகரித்து மாலை 3:45 மணி முதல் இடி, மின்னுடன் கூடிய கனமழை பெய்தது. இதேப் போன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இரவு வரை மழை விட்டுவிட்டுப் பெய்ததால் கடலுார் மாநகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்க ஆரம்பித்தது.
கடலுார் மாநகரின் முக்கிய பகுதிகளான நேதாஜி ரோடு, ஹாஸ்பிடல் ரோடு மற்றும் அருகிலுள்ள சில கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.