ADDED : பிப் 11, 2024 10:50 PM

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் நடேசன் நகர் சுப்ரமணியர் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 9ம் தேதி காலை 7:00 மணிக்கு தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், லஷ்மி ேஹாமம், நவக்கிரஹ ேஹாமம், தன பூஜை மற்றும் பகல் 12:00 மணிக்கு அஷ்டாதசக்ரியைகள், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், விமான கலச ஸ்தாபனம் நடந்தது. தொடர்ந்து, 10ம் தேதி மாலை 5:00 மணிக்கு விசேஷ சாந்தி, வாஸ்து சாந்தி, ப்ரவேசபலி, அங்குரார்ப்பணம், கும்பலங்காரம், கடம் புறப்பாடு, முதல்கால யாக பூஜை நடந்தது.
இதையடுத்து, நேற்று 11ம் தேதி காலை 7:00 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, மூலமந்திர ேஹாமம், காலை 9:45 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 10:10 மணிக்கு அனைத்து மூலவர் விமான கும்பாபிேஷகம், காலை 10:15 மணிக்கு மூலஸ்தன மூர்த்திக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு செல்வ விநாயகர் வீதியுலா நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.