/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தேசிய அளவிலான சிலம்பம் போட்டி கடலுார் அரசு நர்சிங் கல்லுாரி சாதனை 11 பதக்கங்கள் குவித்த மாணவிகள் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி கடலுார் அரசு நர்சிங் கல்லுாரி சாதனை 11 பதக்கங்கள் குவித்த மாணவிகள்
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி கடலுார் அரசு நர்சிங் கல்லுாரி சாதனை 11 பதக்கங்கள் குவித்த மாணவிகள்
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி கடலுார் அரசு நர்சிங் கல்லுாரி சாதனை 11 பதக்கங்கள் குவித்த மாணவிகள்
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி கடலுார் அரசு நர்சிங் கல்லுாரி சாதனை 11 பதக்கங்கள் குவித்த மாணவிகள்
ADDED : செப் 11, 2025 03:25 AM

கடலுார்: கடலுார் அரசு தலைமை மருத்துவமனை, நர்சிங் கல்லுாரி மாணவிகள் சென்னையில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் 11 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்தனர்.
சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லுாரியில் நடந்த இரண்டாவது தேசிய அளவிலான சிலம்பம் போட்டி கடந்த 31ம் தேதி நடந்தது.
அதில் கடலுார் அரசு தலைமை மருத்துவமனை நர்சிங் கல்லுாரி மாணவிகள் மூன்று தங்கம், மூன்று சில்வர் மற்றும் ஐந்து வெண்கல பதக்கங்களை வென்றனர்.
11 பதக்கங்களை வென்றி கடலுார் அரசு நர்சிங் கல்லுாரி மாணவிகள், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பயும் வென்ற னர்.
அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் நடராஜன், நர்சிங் கல்லுாரி முதல்வர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டினர்.