திட்டக்குடி : திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வருவாய்த்துறை அலுவலர்களின் பணியிறக்கம், பெயர்மாற்றம் விதி திருத்தம், அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம் நிரப்புதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக தொடர் பணி புறக்கணிப்பு மற்றும் கத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதே போல் திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன் ஊழியர்கள் இரண்டு நாட்களாக பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.