/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலுாரில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் திருக்கல்யாணம்கடலுாரில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் திருக்கல்யாணம்
கடலுாரில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் திருக்கல்யாணம்
கடலுாரில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் திருக்கல்யாணம்
கடலுாரில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் திருக்கல்யாணம்
ADDED : ஜன 06, 2024 06:23 AM

கடலுார் : கடலுாரில் நடந்த ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் என்கிற ரங்க மன்னார் மற்றும் கோதை நாச்சியார் என்கிற ஆண்டாள் சுவாமிகளை எழுந்தருளச்செய்து கடலுார், கூத்தப்பாக்கம் பக்ஷி கோபாலன் செட்டியார் திருமண மண்டபத்தில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்களுக்கு சங்கல்பம் செய்யப்பட்டது. ஜி.ஆர்.கே. எஸ்டேட் சார்பில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஸ்ரீமத் உடையவர் சபா நிர்வாகிகள் அனந்தாழ்வார், சந்தானகிருஷ்ணன், கிஷோர், தாமோதரன் மற்றும் ஊராட்சித் தலைவர் சரவணன், தொழிலதிபர் சக்திவேல், சோலை ஆகியோர் செய்திருந்தனர்.