ADDED : ஜன 28, 2024 04:49 AM

கடலுார் : கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா வண்டிப்பாளையத்தில் நடந்தது.
பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், கஸ்துாரி, பள்ளி தலைவர் சிவக்குமார், நிர்வாக அதிகாரி லட்சுமி, மக்கள் தொடர்பு அதிகாரி சிவராஜ் பேசினர்.
பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்டே ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின், விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'இந்தியாவில் பெரிய நகரங்களை விட சிறிய நகரங்களில் இருந்தும் கிரிக்கெட் வீரர்கள் உருவாகின்றனர்.
இதற்கு வழிகாட்டியாக தோனி உள்ளார். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதால் உடல் நலம், மனநலம் நன்றாக இருக்கும்' என்றார்.