/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு வழிபாடு பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
ADDED : செப் 21, 2025 03:56 AM

கடலுார் : கடலுார் பெருமாள் கோவில்களில் நடந்த புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சு வாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை, வைகுண்ட நாயகி, ஹேமபுஜ வல்லி தாயார் சமேத தேவநாதசுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 5:00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேப் போன்று, புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி, திருப்பாதிரிபுலியூர் வரதராஜ பெருமாள், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள், அரிசி பெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார், எஸ்.பி., அலுவலகம் அருகில் உள்ள கஜேந்திர வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.