Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலையில் சிறப்பு பூஜை

இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலையில் சிறப்பு பூஜை

இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலையில் சிறப்பு பூஜை

இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலையில் சிறப்பு பூஜை

ADDED : ஜன 25, 2024 04:50 AM


Google News
Latest Tamil News
பெண்ணாடம், : பெண்ணாடம் அடுத்த இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை மீண்டும் இயக்குவதற்கு கணபதி ேஹாமம் நடந்தது.

எஸ்.என்.ஜெ., குழுமம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். எஸ்.என்.ஜெ., நிர்வாக இயக்குனர் ஜெயமுருகன் முன்னிலையில் ஆலையை மீண்டும் இயக்குவதற்கான சிறப்பு கணபதி ேஹாமம் நடந்தது.

நிர்வாக இயக்குனர் ஜெயமுருகன் கூறுகையில், 'விவசாயிகளுக்கு சேரவேண்டிய பழைய நிலுவை தொகை தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுபடி அவரவர் வங்கி கணக்கில் விகிதாச்சாரப்படி செலுத்தப்பட்டு வருகிறது. ஆலை இயங்க விவசாயிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வரும் நவம்பர் இறுதியில் அரவை பணிக்கு தயாராகும்' என்றார்.

அப்போது, தி.மு.க., ஒன்றிய செயலர்கள் சிவ தியாகராஜன், பட்டூர் அமிர்தலிங்கம், வேல்முருகன், செங்குட்டுவன், நகர செயலர்கள் பெண்ணாடம் குமரவேல், திட்டக்குடி பரமகுரு, இறையூர் ஊராட்சி தலைவர் சுதா ரத்தினசபாபதி, விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us