/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் - எம்.எல்.ஏ., பங்கேற்பு சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் - எம்.எல்.ஏ., பங்கேற்பு
சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் - எம்.எல்.ஏ., பங்கேற்பு
சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் - எம்.எல்.ஏ., பங்கேற்பு
சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் - எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : அக் 06, 2025 01:48 AM

நெய்வேலி: நெய்வேலி அடுத்த கொள்ளுக்காரன்குட்டை வள்ளலார் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் முகாமை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு 1,20,000 ரூபாய் மதிப்பில் திருமண உதவித் தொகை, 355 பயனாளிகளுக்கு 9,47,200 மதிப்பில் கல்வி உதவித்தொகை என, மொத்தம் 498 பயனாளிகளுக்கு ரூ.10,99,600 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முகாமில், 11,232 பேர் சிகிச்சை பெற்றனர்.
நிகழ்ச்சியில், ஆர்.டி.ஓ., சுந்தர்ராஜன், நலப்பணிகள் இணை இயக்குநர் மணிமேகலை, தடுப்பூசித்துறை இணை இயக்குனர் வினய்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி, பண்ருட்டி ஒன்றிய முன்னாள் சேர்மன் சபா பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


