/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பூலோகநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்பூலோகநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
பூலோகநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
பூலோகநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
பூலோகநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED : பிப் 24, 2024 06:22 AM

நெல்லிக்குப்பம் : பூலோகநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம், ஆரூத்ரா தரிசனம் உட்பட வருடத்தில் 6 முறை சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம். மாசி மாதம் நடராஜருக்கு மஹாபிஷேகம் நடந்தது. சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு பால், தயிர், விபூதி, வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
சிவகாமசுந்தரி சமேதராய் நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பூஜைகளை குமார், ஹரிபிரபு குருக்கள் செய்தனர்.