Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெடுஞ்சாலை விபத்துக்களில் உயிர் இழப்பு கூடாது எஸ்.பி., ஜெயக்குமார் போலீசாருக்கு அறிவுரை 

நெடுஞ்சாலை விபத்துக்களில் உயிர் இழப்பு கூடாது எஸ்.பி., ஜெயக்குமார் போலீசாருக்கு அறிவுரை 

நெடுஞ்சாலை விபத்துக்களில் உயிர் இழப்பு கூடாது எஸ்.பி., ஜெயக்குமார் போலீசாருக்கு அறிவுரை 

நெடுஞ்சாலை விபத்துக்களில் உயிர் இழப்பு கூடாது எஸ்.பி., ஜெயக்குமார் போலீசாருக்கு அறிவுரை 

ADDED : ஜூன் 20, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
கடலுார்: ஆயுதப்படை மைதானத்தில் நடந்த போலீஸ் வாகனங்கள் ஆய்வின் போது, நெடுஞ்சாலை விபத்துக்களில் உயிர் இழப்பு ஏற்படாதவாறு ஹைவே பேட்ரோல் போலீசார் திறம்பட செயல்பட வேண்டும் என எஸ்.பி., ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார்.

கடலுார் மாவட்ட காவல் துறையில் ஹைவே பேட்ரோல் வாகனம் 14 மற்றும் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் பயன்படுத்தும் 52 ஜீப்கள் , தலைமை இடத்தில் இயக்கப்படும் கனரக வாகனங்கள் 12, மோட்டார் பைக்குகள் 58 என மாவட்ட ஆயுதப்படைப் பிரிவு மூலம் பராமரிக்கப்படும் போலீஸ் வாகனங்கள் வருடாந்திர ஆய்வு ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது.

இதனை எஸ்.பி., ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆயுதப்படை டி.எஸ்.பி., அப்பாண்டராஜ், இன்ஸ்பெக்டர் அருட்செல்வம், எஸ்.ஐ., மகேந்திரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஆய்வில் போலீஸ் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, டீசல் முறையாக கையாளப்படுகிறதா, வானம் பதிவேடுகளை ஆய்வு செய்தார். சில வாகனங்களில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்ய உத்தரவிட்டார். குறிப்பாக நெடுஞ்சாலை ரோந்து (ஹைவே பேட்ரோல்) வாகனங்கள் எப்போது நல்ல நிலையில் இருக்க வேண்டும். தங்கள் பகுதி நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டால் உடன் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்து, 108 ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் உடன் ரோந்துப் பணி வாகனங்கள் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும். விபத்தில் சிக்கியவர்கள் உயிர் சேதம் ஏற்படாத வகையில் நெடுஞ்சாலை ரோந்துப் பணி போலீசார் கவணமுடன் இருக்க வேண்டும்.

வாகனங்கள் அனைத்தும் அரசு செலவில் பழுது நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலை ரோந்துப் பணி போலீசாருக்கு எஸ்.பி., ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us