ADDED : ஜன 06, 2024 06:41 AM
திட்டக்குடி, : ராமநத்தம் அருகே காணாமல் போன மகனை கண்டுபிடித்து தரக்கோரி, தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த தொழுதுாரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 57. இவரது மகன் வேல்முருகன்,30, பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.
விடுமுறையில் ஊருக்கு வந்த வேல்முருகன், கடந்த 25ம் தேதி பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து வேல்முருகனை தேடி வருகின்றனர்.