ADDED : ஜன 07, 2024 01:40 AM
கடலுார்:கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த அம்புஜவல்லிபேட் டையை சேர்ந்தவர் சண்முகம், 48; யுடியூபர்.
இவர், மணல் குவாரி முறைகேடுகளில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க.,வினரை சம்மந்தப்படுத்தி, அவரது வாட்ஸாப் மற்றும் சில வெப் சேனல்களில் செய்தி வெளியிட்டு, அவதுாறு பரப்புவதாக ஸ்ரீமுஷ்ணம் தி.மு.க., நகர செயலர் செல்வக்குமார் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து, ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிந்து, சண்முகத்தை கைது செய்தனர்.