/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வில்வனேஸ்வரர் கோவிலில் வெள்ளி ரத ஊர்வலம்வில்வனேஸ்வரர் கோவிலில் வெள்ளி ரத ஊர்வலம்
வில்வனேஸ்வரர் கோவிலில் வெள்ளி ரத ஊர்வலம்
வில்வனேஸ்வரர் கோவிலில் வெள்ளி ரத ஊர்வலம்
வில்வனேஸ்வரர் கோவிலில் வெள்ளி ரத ஊர்வலம்
ADDED : பிப் 25, 2024 05:17 AM

வேப்பூர் : வேப்பூர் அருகே நல்லுார் வில்வனேஸ்வரர் கோவிலில், மாசி மகத்தையொட்டி வெள்ளி ரத ஊர்வலம் நடந்தது.
வேப்பூர் அடுத்த நல்லூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வில்வனேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மாசி மகம் தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், கடந்த 15ம் தேதி திருவிழா துவங்கியது. தினசரி, சோமலிங்கேஸ்வரர், பெரியநாயகி, இளையநாயகி, முருகன், மாதவ பெருமாள், காளியம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரர் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சாமி வீதியுலாவும் நடந்தது.
நேற்று காலை மாசிமகத்தையொட்டி, மாலை 3:00 மணியளவில் வெள்ளி வாகனத்தில் சாமி வீதியுலாவும், தீர்த்தவாரி உற்சவமும் நடந்தது.
திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், நலலுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.