ADDED : செப் 20, 2025 07:22 AM

கடலுார் : கடலுாரில் மாநகர தமிழ்ச்சங்கம் சார்பில் பாரதியார் நினைவு நாள், நுால் அறிமுகம், சிலப்பதிகாரம் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
சங்கத் தலைவர் சுதர்சனம் தலைமை தாங்கினார். செயலாளர் நல்லதம்பி வரவேற்றார்.
தொழிற்சங்க தலைவர் ஜெகத்ரட்சகன், பாரதியார் படத்தை திறந்து வைத்தார். ரகிமா, கோகுல கண்ணன், கலைச்செல்வி, பரசுராமன், பழனி ஆகியோர் பாரதியார் பற்றி பாடினர்.
சிறப்புத்தலைவர் வழக்கறிஞர் சந்திரசேகரன் வாழ்த்திப் பேசினார். எழுத்தாளர் இள மாலதியின் பொன் துகள்கள், சிறுகதை தொகுப்பு நுாலை, நல்லதம்பி அறிமுகம் செய்து பேசினார்.
சிலப்பதிகார தொடர் சொற்பொழிவில் அரங்கேற்று காதை தலைப்பில் ஆசிரியர் சிவசுப்பிரமணி சொற்பொழிவாற்றினார்.
பசுமை முதன்மையாளர் விருது பெற்ற செல்வநாதன், நல்லாசிரியர் சசிகலா கவுரவிக்கப்பட்டனர்.
மாணவி சஞ்சனா, வரவேற்பு நாட்டியம் நிகழ்த்தினார். பள்ளி மாணவர்கள் பாரதியாரின் கவிதைகளை ஒப்புவித்தனர்.
இணை செயலாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.