ADDED : ஜூன் 04, 2025 08:40 AM

கடலுார்; ரெட்டிச்சாவடி அருகே கடைகளில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் அடுத்த பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, இரும்புக்கடை, டீக்கடை உடைத்து மர்ம நபர்கள் எலக்ட்ரானிக் ஸ்டவ், கட்டிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றனர். புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
நேற்று, உச்சிமேடு புற்றுக்கோவில் பின்புறம் மர்ம நபர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், புதுச்சேரி சுள்ளியாங்குப்பம் முருகன் மகன் ராஜேஷ்,24; மதிகிருஷ்ணாபுரம் வினோத்,25; ராஜேந்திரன்,20; ஆகியோரை பிடித்து விசாரித்தில் கடைகளில் திருடியதை ஒப்புக் கொண்டனர். உடன், போலீசார், 3 பேரையும் கைது செய்து, 3,500 ரூபாய் மதிப்புள்ள திருட்டு பொருட்களை பறிமுதல் செய்தனர்.