/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சக்தி மெட்ரிக் பள்ளி பொதுத் தேர்வில் சாதனை சக்தி மெட்ரிக் பள்ளி பொதுத் தேர்வில் சாதனை
சக்தி மெட்ரிக் பள்ளி பொதுத் தேர்வில் சாதனை
சக்தி மெட்ரிக் பள்ளி பொதுத் தேர்வில் சாதனை
சக்தி மெட்ரிக் பள்ளி பொதுத் தேர்வில் சாதனை
ADDED : மே 21, 2025 02:58 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் சக்தி மெட்ரிக் பள்ளி அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
விருத்தாசலம் சக்தி மெட்ரிக் பள்ளியில் 10, 11 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பிளஸ் 2 தேர்வில் பள்ளி அளவில் 572 மதிப்பெண், பிளஸ் 1 வகுப்பில் 561 மதிப்பெண், 10ம் வகுப்பில் 495 மதிப்பெண் பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் 5 மாணவர்கள், அறிவியல் பாடத்தில் 4 மாணவர்கள், கணித பாடத்தில் 1 மாணவன் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிறுவனர் சந்தானம், தாளாளர் சக்தி சந்தானம் பரிசு வழங்கி பாராட்டினர்.