பாலியல் தொல்லை இளநீர் வியாபாரி கைது
பாலியல் தொல்லை இளநீர் வியாபாரி கைது
பாலியல் தொல்லை இளநீர் வியாபாரி கைது
ADDED : செப் 25, 2025 04:43 AM

புவனகிரி : புவனகிரி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளநீர் வியாபாரியை போலீசார் போக்சோ பிரிவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புவனகிரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வக்கண்ணன்,53: இளநீர் விற்கும் தொழிலாளி. இவரது வீட்டு பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயதுள்ள ஒரு சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பங்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து தெய்வக் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.