Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பண்ருட்டியில் பலாப்பழம் பதனிடும் கிடங்கு அமைத்தும்... பயனில்லை; தனியாருக்கு குத்தகைக்கு விட்டதால் விவசாயிகள் தவிப்பு

பண்ருட்டியில் பலாப்பழம் பதனிடும் கிடங்கு அமைத்தும்... பயனில்லை; தனியாருக்கு குத்தகைக்கு விட்டதால் விவசாயிகள் தவிப்பு

பண்ருட்டியில் பலாப்பழம் பதனிடும் கிடங்கு அமைத்தும்... பயனில்லை; தனியாருக்கு குத்தகைக்கு விட்டதால் விவசாயிகள் தவிப்பு

பண்ருட்டியில் பலாப்பழம் பதனிடும் கிடங்கு அமைத்தும்... பயனில்லை; தனியாருக்கு குத்தகைக்கு விட்டதால் விவசாயிகள் தவிப்பு

ADDED : மார் 19, 2025 04:12 AM


Google News
Latest Tamil News
பண்ருட்டி: பண்ருட்டியில் ரூ.5 கோடி மதிப்பில் கட்டி திறக்கப்பட்ட பலாப்பழ கிடங்கு தனியாருக்கு குத்தகை விட்டதால், விவசாயிகள், வியாபாரிகள் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் மாவட்டத்தில் பண்ருட்டி தாலுகாவில் 714 ஹெக்டர் பரப்பளவில் விளைவிக்கப்படுகிறது. பண்ருட்டி என்றாலே பலாப்பழம் தான் நினைவுக்கு வரும். காரணம் பண்ருட்டி பலாவின் சுவை அதிகம். இதில் பாலுார் -1 ரகம் கடந்த 1992ல் உருவாக்கப்பட்டது. இந்த ரகம் ஆண்டிற்கு இருமுறை காயக்கும். திடமானது, சுவையானது. பாலுார் -2 ரகம் 2006ல் உருவாக்கப்பட்டது. இது ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் காய்க்கும். ஆனால் இனிப்பு, சுவை, நிறம் தங்கம் போல் இருக்கும். பாலுார் -3 ரகம் பால் இல்லாத பலா ரகமாகும். இது ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே காய்க்கும். பலாப்பழம் தைமாதம் பூ வைத்து பங்குனி மாதம் முதல் காய் வைத்து பழமாக விற்பனைக்கு மார்க்கெட்டிற்கு வருகின்றன.விவசாயிகள் பலா காய்கள் தரமானதாக பழுக்கும் நிலை வந்ததும், அதனை அறுத்து, பண்ருட்டி மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். சீசன் நேரத்தில் பலாப்பழ மண்டிகளில் பலாப்பழம் குவிந்து கிடக்கிறது. விலை குறைவாக விற்பனை நடக்கிறது. இதனால் விவசாயிகள், பலாப்பழ வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பலாப்பழம் மூலம் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கிறது. சீசன் நேரத்தில் பலாப்பழத்தை ஒரு மாதம் வரை பதப்படுத்தி விற்பனை செய்திட பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்கு வசதி வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் வேல்முருகன் எம்.எல்.ஏ., பண்ருட்டியில் பலாப்பழ பதனிடும் குளிர்சாதன கிடங்கு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனையேற்று பண்ருட்டி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் கடந்த 2021-22ல் மாநில நிதியின் கீழ் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தலா 250 டன் கொள்ளளவு கொண்ட 4 அறைகள் கொண்ட பதனிடும் கிடங்கு கட்டி திறக்கப்பட்டது.

இந்த கிடங்கு கடந்த 7 மாதங்களுக்க முன் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு தனிநபருக்கு வாடகைக்கு விடப்பட்டது. அவர், பழக்குடோனாக பயன்படுத்தி வருவதால், அரசின் திட்டப்படி பலாப்பழ விவசாயிகள், வியாபாரிகள் பலாப்பழத்தை பதப்படுத்தி விற்பனை செய்ய முடியாமல் போனது. இதற்கு மாவட்ட நிர்வாகம்,தோட்டக்கலைத்துறையினர் பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்கு பலா விவசாயிகள் பயன்படுத்திட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us