ADDED : ஜன 05, 2024 12:19 AM
கடலுார் : பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து குட்கா பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் ஆல்பேட்டையை சேர்ந்தவர் ஜான்பாட்சா, 50; இவர், ஆல்பேட்டை சோதனைச்சாவடி அருகே தனது பெட்டிக்கடையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தார்.
தகவலறிந்த கடலுார் புதுநகர் எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி, ஜான்பாட்சாவை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தார்.