Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இடைநிலை ஆசிரியர்கள் கிழக்கு மண்டல மாநாடு

இடைநிலை ஆசிரியர்கள் கிழக்கு மண்டல மாநாடு

இடைநிலை ஆசிரியர்கள் கிழக்கு மண்டல மாநாடு

இடைநிலை ஆசிரியர்கள் கிழக்கு மண்டல மாநாடு

ADDED : செப் 01, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க கிழக்கு மண்டல மாநாடு நடந்தது.

மாநாட்டிற்கு, மாநில தலைவர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கண்ணன், மாவட்ட துணை தலைவர் பாண்டியராஜ், மாவட்ட துணை செயலர் செல்வக்குமார், மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் சரண்யா, சித்ரா, மாநில பொதுக்குழு உறுப்பினர் அஞ்சுவணன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில துணை தலைவர் ஞானசேகரன், துணை செயலர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினர். மாநில பொது செயலர் ராபட் போராடுவதன் அவசியம் குறித்து பேசினார்.

இதில், மாவட்ட தலைவராக கனகராஜன், மாவட்ட செயலராக பிரபாகரன், மாவட்ட பொருளாளராக சிவானந்தம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us