/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குட்கா பொருட்கள் விற்பனை இரு கடைகளுக்கு சீல் வைப்புகுட்கா பொருட்கள் விற்பனை இரு கடைகளுக்கு சீல் வைப்பு
குட்கா பொருட்கள் விற்பனை இரு கடைகளுக்கு சீல் வைப்பு
குட்கா பொருட்கள் விற்பனை இரு கடைகளுக்கு சீல் வைப்பு
குட்கா பொருட்கள் விற்பனை இரு கடைகளுக்கு சீல் வைப்பு
ADDED : ஜன 08, 2024 05:43 AM
திட்டக்குடி: திட்டக்குடியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்ற இரண்டு கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திட்டக்குடி அடுத்த கோடங்குடி, கோழியூர் பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்ற இரண்டு கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மாரிமுத்து, தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்ற இரண்டு கடைகளிலும் வியாபாரம் செய்ய தடை விதித்து நோட்டீஸ் வழங்கினார். தொடர்ந்து திட்டக்குடி போலீசார் முன்னிலையில் அந்த கடைகளுக்கு சீல் வைத்தார்.